மோசடி பத்திரத்தை ரத்து செய்ய பதிவுத்துறை தலைவருக்கு அதிகாரம்: சட்ட மசோதா நிறைவேற்றம்

 மோசடியாக பதிவு செய்த பத்திரப்பதிவை ரத்து செய்வதற்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதா இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில்தான் 575 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பத்திரம் பதிவு நடவடிக்கைகள் நடக்கின்றன. இதில் பல்வேறுபட்ட இடங்களில், ஆள்மாறாட்டம், போலி ஆவணங்கள் வாயிலாக மோசடிகள் பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக புகார்கள் வருகின்றன.


இது தொடர்பாகப் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்களில் எழுப்பிய கேள்விகளால் பதிவுத்துறைக்கு நெருக்கடியை எழுந்துள்ளது. இதற்கு தீர்வாக பதிவுகள் சட்டத்தில் இதற்கான வழிமுறைகளை ஏற்படுத்த, புதிய சட்டத்திருத்தம் மசோதா, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் (எதிர்பார்க்கப்படுகிறது) தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட பத்திரத்தை ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் சட்ட மசோதாவை வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்தார். இந்த மசோதா இன்று சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி மோசடி பாத்திரங்களை இனி பதிவுத்துறை தலைவரே ரத்து செய்ய அதிகாரம்  அளிக்கும் வகையில் மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post